உள்நாடு

20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியக்கூடிய கருவி

(UTV | கொழும்பு) –  கொரோனா நோயாளர்களை இனங்காண 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பி.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட, இந்தப் பரிசோதனை முறை மூலம் விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள 2 இலட்சம் வைரஸ் பரிசோதனைக் கட்டமைப்புக்களை கொரியாவில் இருந்து தருவித்திருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் இவ்வாறான 8 இலட்சம் பரிசோதனைக் கருவிகளை தருவிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் தருவிக்கப்படும் இந்த கருவிகள் மூலம் முதலீட்டுச் சபையிலும் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தொழிற்சாலையிலும் பணிபுரியும் சுமார் 8 இலட்சம் ஊழியர்கள் பரிசோதிக்கப்படவுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதானி குழுவுக்கு மன்னாரில் இடம்

சிறீதரன் மனோ ஒன்றாக : இராதா, பழனி வேறு பக்கம்!

இலங்கையின் உண்மையான பொருளாதார நிலைமை குறித்த உலக வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வு