உள்நாடு

20 ஆவது அரசியலமைப்பு : 22 ஆம் திகதி பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்

முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டைவிட்டு ஓடும் மைத்திரி?

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி அநுர, ரணில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்

editor