உள்நாடு

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]

(UTV | கொழும்பு) –  முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைபை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

——————————————————[UPDATE 08.40 AM]

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(15) ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவின் அறிக்கை நாளை(16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

editor

ஹட்டனில் மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளே தனிமைப்படுத்தல்