உள்நாடு

20 ஆவது திருத்தச் சட்டம் – அரச அச்சுத் திணைக்களத்திற்கு

(UTV | கொழும்பு)- 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 20ம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் அடங்கிய 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று(02) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் நிபுணர் குழுவில் தமிழ் – முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.

Related posts

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!

ஊரடங்கு உத்தரவை மீறிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!