உள்நாடு

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மூன்றாவது நாளாகவும் இன்று(02) மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி 2 ஆவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுக்கள் மீதான பரிசீலனையை இன்று(02) வரையில் ஒத்திவைத்து நீதிபதி குழாம் உத்தரவிட்டிருந்தது.

ஐந்து பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

V8 ரக சூப்பர் காரை வழங்கவும் – அமைச்சர் சீதா மீண்டும் புலம்பல்

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானினால் உதவி