விளையாட்டு

20க்கு 20 போட்டியில் இலங்கை அணியில் நீக்கப்பட்டுள்ள வீரர்!

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஒக்லேண்ட் மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகும்.
இந்த போட்டிக்கான நியுசிலாந்து அணியில் மிச்சல் சன்டெர் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முழங்காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திரச்சிகிச்சையின் பின்னர், அவர் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கவில்லை.
இலங்கை அணியில் இன்று தனுஷ்க குணதிலக்க விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வி அடைந்த நிலையில், இலங்கை அணி இன்றைய போட்டிக்கு முகம் கொடுக்கிறது.

Related posts

FIFA 2018 – நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அன்வர் அலிக்கு கொரோனா