உள்நாடு

20ஆம் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று(02) 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ , ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?

பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு.

கொழும்பில் 27 இடங்கள் அடையாளம்