சூடான செய்திகள் 1

2 ஆயிரத்து 500 பேருக்கு எதிராக நடவடிக்கை-மின்சாரத்துறை அமைச்சு

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் கடந்த வருடம் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2 ஆயிரத்து 500 பேருக்கு எதிராக மின்சாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவு ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மின்மானியை மாற்றிய 2 ஆயிரத்து 269 பேரும், சட்டவிரோத இணைப்பு மூலம் மின்சாரத்தினை 253 பேரும்  பெற்றுள்ளதாக மின்சாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் மின்சார சபையின் 1901 மற்றும் 1987   எனும் இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02)

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிப்பு

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்