கேளிக்கை

2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி?

(UTV|INDIA)-ஷங்கர் – ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே படத்தை வருகிற மே 2019-ல் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியாக இருக்கிறது.

Related posts

reema lagoo உயிரிழந்தார் – [VIDEO]

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!

“காந்தாரா” – பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்” – ஆவணப்படம் விரைவில்