கேளிக்கை

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `எந்திரன்’. ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் `2.0′ என்ற பெயரில் தற்போது தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக, எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசிய சவீதா ரெட்டி தெரிவித்துள்ளார். `2.0′ படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், சவீதா ரெட்டி அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
எந்திரன், `2.0′ ஆகிய இரு படங்களையும் தொடர்புபடுத்தும் கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது?

புதுதோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா

15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி சம்பளம்