உள்நாடு

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கான பிரதமரின் சவாலை ஏற்றுக் கொள்வதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘புதுஜன பேரணி’யில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடையும் என்ற அச்சத்தில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

தாமதமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று(10) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த மாதம் அனுராதபுரத்தில் உள்ள சல்காடோ மைதானத்தில் பொதுஜன பேரணியை அரசாங்கம் நடத்திய இடத்திலேயே பேரணியொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க தொலைபேசி எண் அறிமுகம்

சிறுவர்களுக்காக முதற்தடவையாக தேசிய தரவுத்தளம்

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை