(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சு வளாகத்தில் கூடியிருந்த டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி சந்திப்பொன்றை நடத்துவதாக எழுத்துமூல உறுதி வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர் 1,169 பேரின் பதவிகளை நிரந்தரமாக்குமாறு கோரி நேற்று சுகாதார அமைச்சுக்கு விஜயம் செய்த டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று (09) பிற்பகல் போராட்டத்தை ஆரம்பித்த அவர்கள், பின்னர் அத்துமீறி சுகாதார அமைச்சுக்குள் நுழைந்ததையடுத்து அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
பின்னர் கலகமடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தாம் அவ்விடத்திலேயே இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.