உலகம்

ஓமிக்ரோனை விட அதிக ஆபத்தான மற்றுமொரு திரிபு

(UTV |  ஜெனீவா) – கொரோனா வைரஸின் அடுத்த திரிபு ஓமிக்ரானை விட அதிக ஆபத்தானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொண்டிருக்கும் வேளையில் புதிது, புதிதாக வேரியண்ட்கள் வந்து உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. டெல்டா போனால், ஓமிக்ரான், ஓமிக்ரான் போனால் அடுத்த வைரஸ் என்று மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

ஓமிக்ரான் வைரஸ் வேரியண்ட் அலை தணிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், அடுத்தகொரோனா வேரியண்ட் முன்பு இருந்ததை விட விட அதிகமாக பரவக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வைரஸ் முடிந்து விட்டது என்று கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் ஹாயாக இருக்கின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ‘ தொற்றுநோய் நம்மிடம் இருந்து விலகி விட்டது என்று மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது. தொற்றுநோய் நம்மிடம் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த கொரோனா வைரஸ் வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக தொற்றுநோய் கொண்டதாக இருக்கும். இதற்கு முன்னர் இருந்த வேரியண்ட்களை விட இது மிகவும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம். ஒருவேளை இது மிகவும் ஆபத்தானதாக கூட மாறலாம். எதிர்கால வேரியண்ட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை எளிதில் தகர்த்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

Related posts

துருக்கி மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்து 9 நோயாளிகள் பலி

முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை – பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு

editor

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் : டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்