உள்நாடு

பிரதமரின் திருப்பதி பயணம் குறித்து இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் தனியார் ஜெட் விமானம் மூலம் இந்தியாவிற்கான தனியார் யாத்திரையில் பங்குபற்றியமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதர 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

இதன்படி, முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவுக்கு தெரிவித்து 2022 பெப்ரவரி 2ஆம் திகதி ஆணைக்குழுவின் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இலஞ்ச ஊழல் சட்டத்தை மீறி பிரதமர் தனிப்பட்ட ஜெட் விமானத்தை பரிசாக எடுத்துச் சென்றாரா என்பதை அறிய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 23, 2021 அன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் இரண்டு நாள் தனி ஜெட் விமானத்தில் இந்தியாவின் திருப்பதிக்கு பயணமாகி இருந்தனர்.

பிரதமரின் நண்பர் ஒருவர் இந்த விஜயத்திற்காக விமானத்தை இலவசமாக வழங்கியதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

  • ஆர்.ரிஷ்மா

Related posts

அறுபது தாண்டியோருக்கு பூஸ்டருக்கு அனுமதி

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

தலதா அத்துகோரள சஜித்துக்கு முதுகில் குத்தியுள்ளார் – முஜிபுர் ரஹ்மான்

editor