உள்நாடு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட பாடசாலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர் – அதிபர் சேவைக்கான சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக அமைச்சரவையால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதீர்மானத்தின் அடிப்படையில் பொது நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் நிபந்தனைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!