உள்நாடு

நிதியமைச்சர் தலைமையில் புதிய குழு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான உரிய திட்டமிடல்களை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக சுங்கத்தின் வசமுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய குழுவொன்றை நியமிக்கவும் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்திய ஜனாதிபதி, இது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வை பணிகள் புதிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]

வீதி விதிகளை மீறும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை