உள்நாடு

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி : ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

(UTV | கொழும்பு) – ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் (தனியார்) நிறுவன ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி நிறுவனம் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன.

அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் வியாபார நடவடிக்கைகளுக்காக 24 தாங்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்படும் 14 எண்ணெய் தாங்கிகள் குறித்த நிறுவனத்திற்கு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஏனைய 61 எண்ணெய் தாங்கிகளும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல்ஸ் நிறுவனத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில மாகாணங்களுக்கு பி.ப 2 மணிக்கு பின்னர் மழை

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீர் தீ விபத்து