உலகம்

ஒரே டோஸ் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு அனுமதி

(UTV | புதுடெல்லி) – ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 9வது கொரோனா தடுப்பூசி ஆகும். முன்னதாக கொவிஷீல்டு, கொவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், நாட்டில் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி ரஷியாவின் கேமலேயா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், சீரம் நிறுவனம், பெனாகியா பயோடெக்,ஹெட்டிரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்கின்றன. இந்த தடுப்பூசி தனியார் மூலமாக மட்டுமே கிடைக்கும். அரசு இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் அவசியம்

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

இந்தியா தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும்