(UTV | கொழும்பு) – உற்பத்தி சரிவு, அரசியல்வாதிகள் செய்யும் திருட்டு,ஊழல் போன்ற நிதி மோசடிகளின் பலன்களை இன்று நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது என தேசிய மக்கள் சக்தி கட்சி வலியுறுத்துகிறது.
நேற்று இடம்பெற்ற காலி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் தியாகம் செய்வதற்கு உதாரணம் என்று அரசாங்கம் கூறினாலும், நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள் பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொள்வதே தற்போது இடம்பெற்று வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.