உள்நாடு

ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னதாகவே அறிந்திருந்தும், அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் எடுக்காதிருப்பதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 7 மணி முதல் தாம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் சேவைக்கு சமூகமளிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும்.

ஒருவாரத்திற்குள் தமக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லையாயின், குறித்த வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பேருந்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

83 எம்பிக்களின் பதவிகள் பறிபோகும் நிலை?

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை; ஒருவருக்கு மட்டும் அனுமதி