(UTV | கொழும்பு) – ஏப்ரல் 30ம் திகதி முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (05) வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 30ம் திகதி முதல் பொது இடங்களில் காதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொது இடங்கள்’ மற்றும் ‘முழு தடுப்பூசி’ பற்றிய வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல்;