கேளிக்கை

ஐஸ்வர்யா தனுஷ் : கொவிட் தொற்று

(UTV | சென்னை) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு தனுஷ் குடும்பத்திலிருந்து ஆறுதல் மெசேஜ் வந்துள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா உலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளின் 18 வயது வாழ்க்கையில், இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் பிரிவதாக ட்விட்டரில் பதிவு ஒன்றினை ஒன்றாக வெளியிட்டிருந்தனர்.

இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், ஒன்று நேர மாட்டார்களா என ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கணவரின் பிரிவினை அறிவித்த பின்பு எந்தவொரு பதிவும் போடாத ஐஸ்வர்யா, நேற்று தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக போஸ்ட் ஒன்றினை வெளியிட்டார்.

அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தயவு செய்து மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். 2022 கொண்டு வந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் எனக்காக வைத்திருக்கிறது என பார்ப்போம் என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

(VIDEO)-அனிருத்தின் பட்டையை கிளப்பும் ‘பேட்ட’ தீம் மியூசிக்

‘விஜய் 61’ படத்திற்கு இதைவிட சூப்பரான தலைப்பு பொருந்துமா?..கசிந்த தகவல்

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்