உள்நாடு

நாளை ரஞ்சனுக்கு போது மன்னிப்பு : உறுதியாக நம்புகிறேன் [VIDEO]

(UTV | கொழும்பு) – நாட்டின் 74வது சுதந்திர தினமான நாளை (04) ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (03) காலை சென்று பார்வையிட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஒரு கலைஞராக,அவர் கலைத் துறைக்கு பெரும் சேவை ஆற்றி வந்தார்.அவர் ஆற்றிய பொது சேவையை மேலும் வலுவாக முன்னெடுக்க அவரது கொடுப்பனவுகள், சம்பளம்,சலுகைகள்,வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணித்த தலைவர் என்ற வகையில், நாளை அவர் முழுமையாக விடுதலை பெறுவார் என நம்புகிறோம்.

மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து, மனிதாபிமானியின் பூரண விடுதலைக்காக அவரை நாளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். மனித நேயத்திற்காகவே இந்த பரிந்துரையை முன்வைக்கிறேன்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

Related posts

இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம்

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் டலஸ்