(UTV | மும்பை) – ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வரும் 12, 13-ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன. இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் டில் விளையாடாத 355 வீரர்களும் அடங்குவர். இதில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். 48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. 20 பேருக்கு ரூ.1.50 கோடி அடிப்படை விலை உள்ளது.