உள்நாடு

நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்