(UTV | பீஜிங்) – அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை தோராயமாக 25 சதவீதம் குறைக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் குறைந்ததே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெனான், ஷினாக்ஷி, குவாங்டாங் மற்றும் ஹூபே உள்ளிட்ட பல மாகாணங்களில் ஊதியக் குறைப்புக்கு வழிவகுத்த நெருக்கடியால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில மாநிலங்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்த ஆண்டு ஜனவரியில் பெற்ற போனஸை பத்து நாட்களுக்குள் அரசிடம் திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.