உள்நாடு

நாட்டில் தலைதூக்கும் டெங்கு

(UTV | கொழும்பு) – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கை நாளை

அரசிற்கு மற்றுமொரு சவாலாக தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு [VIDEO]

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் – காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்

editor