விளையாட்டு

ஒலிம்பிக்கில் சீனா தலையிடக் கூடாது

(UTV |  பீஜிங்) – சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4ம் திகதி தொடங்கி 20ம் திகதி முடிகிறது.

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, “பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

Related posts

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டி இன்று

தொடரிலிருந்து விலகிய பெப் டு பிளசிஸ்

வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!