(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது குறித்த தீர்மானம் ஆலோசனை மட்டத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை கடன் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதிலிருந்து மீள்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
இதற்காக இலங்கையின் பிணையப் பங்காளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்புடனும் கலந்துரையாடப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.