உள்நாடு

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு மாஃபியாதான் காரணம்

(UTV | கொழும்பு) – கடந்த இரு தினங்களில் 31,200 மெட்ரிக் டொன் சீமெந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் சந்தையில் மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு மாஃபியா ஒன்றின் செயற்பாடுகளே காரணம் என இலங்கை கட்டட நிர்மாண சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் தலைவர் சுசந்த லியனாராச்சி கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அதிக விலைக்கு விற்கப்படும் சீமெந்து விற்பனையை தடுக்க முடிந்தவரை விலை கட்டுப்பாட்டை பேணுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை கட்டட நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

சிங்கப்பூரில் இருந்த 186 பேர் நாடு திரும்பினர்

எம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பின் எவ்வித பிரச்சினையும் இல்லை