உலகம்

பதவி தான் பெரிசு : பிரதமர் போரிஸ் காட்டம்

(UTV |  இங்கிலாந்து) – தாம், பதவி விலகப்போவதில்லை என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியன்று கொரோனா முடக்கலின்போது, பிரதமரின் வளாகத்தில்,(டவுனிங் ஸ்ட்ரீட்) இடம்பெற்றதாக கூறப்படும் விருந்துபசாரம் தொடர்பில் போரிஸ் ஜோன்சன் பதவி விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

எனினும் தாம் பதவி விலகப்போவதில்லை என்று ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் அறிக்கையை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விடயத்தில், பிரதமர் செயற்பட்ட விதம், பொதுமக்களை அவமதிப்பதாகவே அமைந்துள்ளதாக தொழில் கட்சியின் தலைவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் சம்பவம் தொடர்பான அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

லெபனான் நீதி அமைச்சர் இராஜினாமா

ஆப்கானில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி.

கத்தார் FIFA அரங்கில் சாகிர் நாயகவின் மார்க்கப்பிரச்சாரம் செய்ய ஆயத்தம்!