உள்நாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

(UTV | கொழும்பு) – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்’ அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (26) அனுமதி வழங்கியுள்ளது.

முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

இனவாத ஊடகங்களின் பொய் பிரசாரம் தொடர்பில் ரியாஜின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடகிழக்கு பகுதிகளை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் – சஜித்

editor