உள்நாடு

கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் இரண்டு வாரங்களில் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாவிடத்து எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்று அவசியமாகவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் நீல் எஸ்.அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்குச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டது.

அவர்களுக்குத் தீர்வு வழங்கப்பட்ட போதிலும் ஏனைய அரச சேவையாளர்களுக்கு சம்பள பிரச்சினை அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடித் தீர்வினை பெற்றுக் கொள்வதற்குத் தயாராகவுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் நீல் எஸ்.அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது