உள்நாடு

எகிறும் கொரோனா : ஒட்சிசன் தொகையை இறக்குமதி செய்ய நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா சிறிதளவு அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலைகளின் திறன் அல்லது அதிகாரிகளின் திறன் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், நிலைமை சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாக தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

கடந்த முறை தொற்று அதிகரித்த போது, அதிகமான படுக்கைகள் பெறப்பட்டதாகவும் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் சுமார் 80,000 படுக்கைகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

63 அதி தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் கொரேனா நோயாளிகளால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக நாடு முழுவதும் 70 அதி தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த உச்சக்கட்ட நிலையின் போது அதிகரிக்கப்பட்ட ஒட்சிசன் திறன் தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வருவதால் ஒட்சிசனை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

தேவையானால், முந்தைய அலைகளின் போது செய்ததைப் போல, ஒட்சிசன் தொகையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

editor