(UTV | கொழும்பு) – இலங்கையில் நாளாந்தம் 2,000க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தினசரி கொரோனா நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“தற்போது, இலங்கையில் கொவிட் நோயாளர்களின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 2,000 கொவிட் நோயாளிகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் துல்லியமான தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான சிகிச்சை மையங்கள் இடம் இல்லாமல் திணறி வருகின்றன.
அதிகாரிகளும், மக்களும் இந்த ஆபத்தையும், நாம் இருக்கும் நிலைமையின் தீவிரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், குறைந்து வரும் கோவிட் தொற்று இறப்புகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.
எனவே, அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்குச் தடுப்பூசி போடுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.