(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பல தடவைகள் மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சி பெர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.