உள்நாடு

விரக்தியடைந்த நாடே எஞ்சியுள்ளது – சஜித் சாடல்

(UTV | கொழும்பு) – தற்போதைய அரசாங்கம் இன்று முழு நாட்டையும் இருளில் மூழ்கடித்துள்ளதாகவும், விரக்தியடைந்த நாடே மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து நாட்டை பாதாளத்தை நோக்கித் தள்ளுவதால் இந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருட்களின் விலைகளை குறைக்குமாறு அமைச்சரிடம் கேட்ட போது, ​​பொருட்களின் விலைகளை குறைப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர் மாறி மீள கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் நிர்வாகத்தை முழு நகைச்சுவையாக இந்த அமைச்சர்களே மாற்றியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இருண்ட பயணத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இருளின் நடுவே தோன்றிய ஒரே ஒரு வெள்ளிக் கோடு ஐக்கிய மக்கள் சக்திதான் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (23) அம்பலாந்தோட்டை மலாய் கொலனியில் உள்ள உச்சவாலிகா விகாரையில் நடைபெற்ற உந்துவப் பெருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு பணிப்புரை