உள்நாடு

“எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது” – கம்மன்பில

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் தாங்கிகளுக்கு அமெரிக்க டொலர் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே மின்வெட்டு இருக்காது என அமைச்சர் கம்மன்பில இன்று(24) தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடலில், இதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், இலங்கை மின்சார சபைக்கு செலுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 93 பில்லியன் கடனாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்குள் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் மின்சார உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இன்று நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எவ்வித அறிவிப்பையும் வெளியிட்டிருக்கவில்லை.

Related posts

சிங்கள பாடசாலைக்கு அருகில் தமிழ் பாடசாலை : மனோ கணேசன் கண்டனம்.

77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு