உலகம்

கொரோனா பெருந்தொற்றை முடிவு காணும் தருவாயில் ஐரோப்பா

(UTV | ஐரோப்பா) – கொரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளதாக, ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்;

“.. ஐரோப்பா கொரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயை நோக்கிச் செல்வது தற்போதைய நிலவரத்தால் புலப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவின் 60% பேரை ஒமிக்ரோன் தொற்றி விடும்.

ஒமிக்ரோன் அலை ஐரோப்பாவில் குறைந்தவுடன் உலகளவில் சில காலம் அமைதி நிலவும். அதற்குக் காரணம் தடுப்பூசி ஆற்றலாக இருக்கலாம் அல்லது மக்களுக்கு மந்தை தடுப்பாற்றல் உருவானதாக இருக்கலாம்.

அதன் பின்னர் கொரோனா குறிப்பிட்ட காலத்தில் தலைதூக்கும் தொற்றாக அதன் தாக்கத்தை குறைக்கும். இந்த ஆண்டு கடைசி வரை வேறு எந்த வகை தொற்று தலைதூக்கலும் இருக்காது என்று நாங்கள் கணிக்கிறோம்…” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை

பிரணாப் முகர்ஜி காலமானார்

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு