உள்நாடு

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக வருகிறது சட்டம்

(UTV | கொழும்பு) –  பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் – 19 தொடர்பான பிரதான ஒருங்கிணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட முன்னேற்றமடைந்த ஏனைய நாடுகளிலும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. எமது நாட்டிலும் குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் நீதவானின் ஆலோசனைகள் கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய எதிர்காலத்தில் குறித்த ஆலோசனைகளுக்கமைய செயற்பட எதிர்பார்த்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.

தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க சட்டத்தை பயன்படுத்துவதன் ஊடாகவே இதன் முக்கியத்துவம் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. சட்டத்தை பயன்படுத்தியேனும் மக்களை பாதுகாப்பதற்கென நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

ஜனவரியில் மீளவும் ஆரம்பமாகும்

Scan Jumbo Bonanza 2023 : விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம