உள்நாடு

மின் வெட்டினால் உணவக உரிமையாளர்களுக்கு நட்டம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக உணவக உரிமையாளர்கள் கணக்கிட முடியாத நிதி இழப்பை சந்தித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாரியளவிலான உணவுப் பொருட்களும் பாவனைக்குத் தகுதியற்றதாக மாறியுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.

மேலும், சிறிய அளவிலான சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்களின் தினசரி வருமானம் குறைந்து விட்டதாகவும், தற்போதைய நிலைப்பாடு தொடர்ந்தால் அவர்கள் நட்டத்தில் இயங்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.

மின்வெட்டு காரணமாக நிலையான வெப்பநிலையில் குளிர்சாதனப்பெட்டிகளில் வைக்க முடியாததால், பால் பொருட்கள் மற்றும் இறைச்சிப் பொருட்களை தினமும் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அசேல சம்பத் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!