உள்நாடு

இராஜினாமாவுக்கு தயாராகும் விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

(UTV | கொழும்பு) – நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை தான் சேவையில் இருந்து விலகி இருப்பதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தன் கடமையைச் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இல்லை என்றால் தாம் பதவி விலகுவதாகவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஊழியர்கள் குழுவொன்றின் தன்னிச்சையான தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் அதன் விளைவாக ஏனைய பணியாளர்கள் மற்றும் மிருகக்காட்சிசாலையின் விலங்குகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இன்றைய மின்வெட்டில் மாற்றங்கள்

தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும்