(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள், திணைக்கள இணையத்தளத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.