(UTV | கொழும்பு) – கனியவள கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட 10,000 மெட்றிக் டன் எரிபொருள் தற்போது, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளரும், ஊடக பேச்சாளருமான அன்ரு நவமணி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய தினத்திற்குள் அந்த எரிபொருளை மின் உற்பத்தி நிலையத்தின் தாங்கியில் களஞ்சியப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவதாக 1,800 மெட்றிக் டன் எரிபொருளை களஞ்சியப்படுத்துவதற்கான பணிகள் நேற்றிரவு 11.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதனால், களனிதிஸ்ஸ வளாகத்தில் உள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் மீள இயங்கி வருகின்றன.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு மீள எரிபொருள் கிடைத்துள்ளதால், இன்றைய தினம் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளரும், ஊடக பேச்சாளருமான அன்ரு நவமணி குறிப்பிட்டுள்ளார்.