உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்க்க மத்திய வங்கியினால் நிதி

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி 37,000 மெட்றிக் டொன் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதிலிருந்து 10,000 மெட்றிக் டொன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெட்றிக் டொன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் தொடர்பில் மஹேலவின் கருத்து

பறந்து கொண்டிருந்த காக்கைகள்கொத்து கொத்தாக விழுந்து உயிரிழப்பு!

இன்றும் ஒரு மணித்தியால மின்வெட்டு