உள்நாடு

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) இலங்கை மின்சார சபைக்கு 900 மெகாவோட் எரிபொருளை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும்.

நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது. இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.

அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும். இதுவொரு பாரிய பிரச்சினையாகும்.

இந்நிலையில் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மேலும் 168 மெகாவோ

Related posts

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

லிட்ரோ கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல்