உள்நாடு

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நிதியமைச்சு, மத்திய வங்கி, மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல தரப்பினரும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு மின்சார சபையின் தலைவர் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

2020 O/L : பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

தேங்காய் பறித்து தருவதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக முயற்சி-சந்தேக நபர் கல்முனையில் கைது

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor