சூடான செய்திகள் 1வணிகம்

1990 சுவசெரிய’ சேவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்

(UTV|COLOMBO) 1990 சுவசெரிய’ அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன், 2016 ஜூலை மாதம் 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகணங்களில் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது இது இந்த சேவையானது மத்திய மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த அமைச்சர் ஹர்ஷ டிசில்வா, இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள சகல வழிகளிலும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உயிர்களை பாதுகாக்கும் இந்த மாபெரும் நடவடிக்கையை நாடு முழுவதும் வாழும் இலங்கை மக்கள் அனைவருக்கும் பெற்றுக்கொடுக்க எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுமாறும் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

பேரூந்து கட்டண குறைப்பு-கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்

மத்திய கலாசார நிதியத்தின் வருமானம் வீழ்ச்சி