உள்நாடு

எகிறும் ஒமிக்ரோன்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 12 – 24 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று காணப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறுதியாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் 12 – 24 சதவீத ஒமிக்ரோன் தொற்றாளர்கள் காணப்பட்டலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளதுடன்,இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அதனை தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் முடிவு!

இன்று மின்துண்டிப்பு இல்லை