உள்நாடு

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நாட்களுக்கான ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடம்பெறமாட்டாது என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கான ஆசன பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூர சேவை ரயில்களை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர்.

இதன் காரணமாக ரயில்வே பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சமய கருத்துக்களை திரிபுபடுத்துதலை அவதானிக்க குழு – அமைச்சரவை அங்கீகாரம்

வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

சிறைக்கைதி ஒருவர் பலி